ஜெனீவாவில் பாட்டியை கத்தியால் குத்திக் கொன்ற பேத்தி

17 ஆவணி 2025 ஞாயிறு 05:28 | பார்வைகள் : 339
ஜெனீவாவில் பேத்தி தனது பாட்டியை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜெனீவாவில் ரூட் டி ஃபிரான்டெனெக்ஸில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 34 வயது பெண் ஒருவர் தனது பாட்டியை (78 வயது) கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து, குடும்ப உறுப்பினரால் பொலிசாருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.
சந்தேக நபர், Eaux-Vives ரயில் நிலையம் அருகே கைது செய்யப்பட்டார்.
78 வயதுப் பாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.