அழகான தொடையை பெற செய்யக்கூடிய பயிற்சிகள்
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9782
பெண்களுக்கு வயிற்று கொழுப்பிற்கு அடுத்தபடியாக தொடையில் உள்ள கொழுப்பை கரைப்பது தான் மிகவும் கடினமானது. ஆகவே தொடையில் உள்ள கொழுப்பை கரைக்க வேண்டுமானால், ஒருசில டயட் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக தொடையில் உள்ள கொழுப்பை கரைக்கும் படியான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக ஒரே உடற்பயிற்சியை மட்டும் செய்து கொண்டிருக்கக் கூடாது. மாறாக வாழ்க்கை முறையில் சிறு மாற்றங்களை கொண்டு வந்தால் தான், தொடையில் உள்ள கொழுப்புக்களை கரைக்க முடியும்.
அப்படி தொடையில் உள்ள கொழுப்புக்களை கரைப்பதற்கு எந்த மாதிரியான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, உணவில் என்ன மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பதை பார்க்கலாம். தினமும் காலையில் வாக்கிங் செய்வதன் மூலம், தொடையில் உள்ள கொழுப்புக்களை எளிதில் கரைக்கலாம்.
எப்போதும் லிப்ட், எலிவேட்டர் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு பதிலாக, படிக்கட்டுக்களைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலமும் தொடையில் உள்ள கொழுப்புக்களை குறைய ஆரம்பிக்கும். முன்பெல்லாம் எங்கு சென்றாலும் சைக்கிள் தான். ஆனால் தற்போது கால் வலிக்காமல் இருப்பதற்கு பைக் விலை குறைவிலேயே கிடைக்க ஆரம்பித்தவிட்டது.
இதனால் சைக்கிள் ஓட்டுவோரின் எண்ணிக்கை குறைந்து, தொடைகளில் கொழுப்புக்கள் தங்க ஆரம்பித்துவிட்டது. எனவே பைக்கை அதிகம் பயன்படுத்தாமல், அவ்வப்போது சைக்கிளையும் பயன்படுத்துங்கள். தொடையில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும் உடற்பயிற்சிகளில் ஒன்று தான் ரன்னிங்.
இத்தகைய ரன்னிங்கை ட்ரெட்மில்லில் மேற்கொள்வதை விட, வெளியே காற்றோட்டமாக சுத்தமான காற்றினை சுவாசித்தவாறே மேற்கொள்வது சிறந்தது. தினமும் ஸ்கிப்பிங் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் தொடையில் உள்ள கொழுப்புக்களை கரைப்பதற்கு உதவி புரியும்.
இந்த பயிற்சிகள் மட்டும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகள் சில உள்ளன. அவற்றை செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.