வயதான தோற்றத்தை தடுக்கும் வீட்டுப் பொருட்கள்
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9612
பெண்களின் சருமம் மிகவும் சென்சிட்டிவ் மற்றும் விரைவில் வயதான தோற்றத்தை வெளிப்படுத்தும். அதிலும் பெண்கள் 40 வயதை அடைந்தால் போதும், முகத்தில் சுருக்கங்கள் ஆங்காங்கு காணப்படும். சருமம் நெகிழ்ச்சி தன்மையை இழந்து, முகத்தில் சுருக்கங்கள் அதிகமாகி, பின் முகமே அசிங்கமாக இருக்கும்.
இவை அனைத்திற்கும் காரணம் பெண்கள் இளமையாக இருக்கும் போது, நன்கு ஆரோக்கியமான உணவுகளை உண்டு, சருமத்தை பராமரித்து வருவர்.
ஆனால் திருமணமாகிவிட்டால், சிறிது நாட்கள் அந்த பராமரிப்பு குறைந்துவிடுவதால், முகத்தில் உள்ள பொலிவானது நீங்கி, பாட்டி போன்ற தோற்றம் வெளிப்படும். வீட்டிலேயே சருமத்தை பராமரித்தால், சருமத்தில் தோன்றும் சுருக்கங்கள் நீங்கி, இளமையோடு காணலாம். அவை என்வென்று பார்க்கலாம்..
• அவகேடோவில் எண்ணெய் தன்மை அதிகம் இருக்கும். எனவே இந்த அவகேடோவை நன்கு அரைத்து, அதனை முகத்திற்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தால், சருமம் நன்கு பொலிவோடு, இளமையாக காணப்படும். இதனை வாரம் இருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
• விளக்கெண்ணெயை முகத்தில் தடவி தினமும் மசாஜ் செய்து வந்தால், முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி, சருமம் நன்கு மென்மையாக இருக்கும்.
• அன்னாசியும் முதுமைத் தோற்றத்தை தடுக்கும் பொருட்களில் ஒன்று. அன்னாசியை முகத்தில் தடவி, சிறிது நேரம் தேய்த்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனை வாரம் ஒருமுறை செய்ய வேண்டும்.
• இரவில் படுக்கும் போது, கிளிசரினை, எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டருடன் கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து, காலையில் எழுந்து கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் ஒருவித பழுப்பு நிற புள்ளிகள் நீங்கி, சருமமும் மென்மையாக இருக்கும்.