Paristamil Navigation Paristamil advert login

கூந்தல் வளர்ச்சியை தூண்டும் தேங்காய் எண்ணெய்

கூந்தல் வளர்ச்சியை தூண்டும் தேங்காய் எண்ணெய்

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9345


 கண்ட கண்ட எண்ணெய்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் தேங்காய் எண்ணெய் கொண்டு கூந்தலைப் பராமரித்தால், கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைப் போக்கலாம். 

 
அதிலும் ஒரு வாரத்திற்கு இரண்டு நாட்களாவது தவறாமல் தேங்காய் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்து ஊற வைத்து குளித்தால், மயிர்கால்கள் வலுவடைந்து, கூந்தல் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளைப் போக்கலாம். 
 
கூந்தலானது அடிக்கடி சிக்கடைந்து கொண்டிருந்தால், அவற்றை எளிதில் சரிசெய்ய தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துங்கள். மேலும் கூந்தல் வறட்சியுடன் அசிங்கமாக காணப்படும் போது, அவற்றை போக்க தேங்காய் எண்ணெயை பயன்படுத்துங்கள். 
 
தேங்காய் எண்ணெயால் கூந்தலை பராமரித்தால், மயிர்கால்களானது வலுவடைவதுடன், கூந்தல் வளர்ச்சியானது அதிகரிக்கும். தற்போது பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று கூந்தல் உதிர்தல். இத்தகைய கூந்தல் உதிர்தலைத் தடுக்க, தலைக்கு குளிக்கும் முன் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி நன்கு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து ஊற வைத்து குளிக்க வேண்டும். 
 
பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட வாரம் இருமுறை தேங்காய் எண்ணெயால் நன்கு மசாஜ் செய்து குளித்து வருவதுடன், தினமும் தேங்காய் எண்ணெயை தலைக்கு தேய்த்து வாருங்கள். இப்படி தவறாமல் செய்து வந்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்