நான்கு தரப்புச் சந்திப்பு - மக்ரோன் கோரிக்கை!

19 ஆவணி 2025 செவ்வாய் 06:00 | பார்வைகள் : 684
பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன், திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் நடந்த உச்சி மாநாட்டில், 'ஒரே மேசையில் டொனால்ட் டரம்ப், விளாதிமிர் புட்டின், மற்றும் வொலாதிமிர் செலன்ஸ்கியைச் சந்திக்க வைத்து வெற்றி பெற்ற பின், அந்த விவாதங்களில் ஐரோப்பிய நாடுகளும் சேர்க்கப்பட வேண்டும்' எனக் கோரினார்.
'ஒரு முத்தரப்புச் சந்திப்பு மிகவும் முக்கியமானது, ஏனெனில் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரே வழி அதுவே. ஆனால் அதன்பின், நிச்சயமாக, நமக்குத் தேவையானது ஐரோப்பியத் தரப்பையும் இணைத்து நான்கு தரப்புச் சந்திப்பை ஏற்படுத்துவது ஆகும், ஏனெனில் நாம் உக்ரைனின் பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பற்றி பேசும் போது, அது முழு ஐரோப்பிய கண்டத்தின் பாதுகாப்பையும் குறிக்கும்' என்று அவர் மொனால்ட் ட்ரம்ப், முக்கியமான ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் NATO பொதுச் செயலாளர் Mark Rutte முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
'இந்த மேசைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் சமாதானத்திற்கு ஆதரவானவர்கள். உக்ரைனிற்கும் ஐரோப்பிய கண்டத்திற்கும் நிலையான அமைதி தேவைப்படுவதால், பாதுகாப்பு உத்தரவாதங்கள் அவசியம். நீங்கள் எங்களை எவ்வளவு நம்பலாமோ, அதே அளவுக்கு நாங்களும் உங்களை நம்பலாம்', எனவும் கூறினார் எமானுவல் மக்ரோன்.