எயார் பிரான்ஸ் : விமானத்துக்கு தாக்குதல்! - அவசரமாக தரையிறக்கம்!!
.jpg)
19 ஆவணி 2025 செவ்வாய் 08:02 | பார்வைகள் : 978
எயார் பிரான்ஸ் விமானத்தில் ( AF718) வைத்து பணிப்பெண் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை அடுத்து விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது.
Dakar (Senegal) நகரில் சாள்-து-கோல் விமான நிலையத்துக்கு வருகை தந்த விமானம், மீண்டும் இங்கிருந்து சனிக்கிழமை புறப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமான பணிப்பெண் ஒருவரை பயணி ஒருவர் தாக்கியுள்ளார். இதனால் விமானத்துக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதை அடுத்து, விமானம் உடனடியாக திருப்பப்பட்டது. மீண்டும் சாள்-து-கோல் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. காவ்ல்துறையினர் அழைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதல் மேற்கொண்ட நபர் மாலி நாட்டவர் என அறிய முடிகிறது.