ஜப்பானில் விழுந்த விண்கல் - சில நொடிகளுக்கு பகல் போல் மாறிய இரவு

20 ஆவணி 2025 புதன் 10:57 | பார்வைகள் : 287
ஜப்பானில் உள்ள கியூஷு மற்றும் ஷிகோகு பகுதியில் நேற்று இரவில் விண்கற்கள் விழுந்துள்ளது.
அங்குள்ள ஃபுகுவாகோ விமான நிலையத்தின் கேமராக்கள் இதனை படம்பிடித்துள்ளன.
இந்த வீடியோக்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீல நிற ஒளியுடன் வந்த விண்கற்கள், சில வினாடிகளில் இரவை பகல் போல காட்சியளிக்க செய்தது.
முன்னதாக கடந்த வாரம், வடகிழக்கு ஜப்பானில் உள்ள அமோரி மாகாணத்தில் விண்கற்கள் கொத்து நிகழ்வு காணப்பட்டது.
பெர்சிட் விண்கல் மழை பொழிந்த போது, பல விண்கற்கள் ஒரே நேரத்தில் வானில் தோன்றும் அரிய நிகழ்வை காணப்பட்டது.
விண்கற்கள் என்பது விண்வெளியில் உள்ள பாறைகள் ஆகும். இதன் அளவு தூசி முதல் சிறுகோள் வரை மாறுபடும்.
இந்த விண்கற்கள், வளிமண்டலத்தில் பூமியிலோ அல்லது வேறு எந்த கிரகத்திலோ அதிவேகத்தில் நுழையும் போது, Shooting stars என அழைக்கப்படும்.
நாளொன்றுக்கு, பூமியில் சுமார் 40 டன் விண்கல் பொருட்கள் விழுவதாக நாசா தெரிவித்துள்ளது.
வால்நட்சத்திரங்கள் விட்டுசென்ற தூசியின் பாதை வழியாக பூமி செல்லும் போது, இந்த விண்கல் மழை பொழிகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1