Paristamil Navigation Paristamil advert login

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

20 ஆவணி 2025 புதன் 14:13 | பார்வைகள் : 171


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் படிப்படியாக வணிகத் திட்டத்துடன் மேம்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்றைய தினம் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார்.

வடமாகாணத்திற்கு அதிகளவில் வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய வகையில் காணப்படும் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் 2ம் கட்ட அபிவிருத்தி காலம்தாழ்த்தப்படுவது ஏன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பலாலி சர்வதேச விமானநிலையத்திலிருந்து தற்போது நாள்தோறும் சென்னை மற்றும் திருச்சி விமானநிலையங்களுக்கு சேவை முன்னெடுக்கப்படுகிறது.

இதில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 70 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இங்கு பயணிகளுக்கான முழுமையான வசதிகள் செய்து கொடுக்கப்படாவிட்டாலும் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

இந்த விமான நிலையத்தின் வருமானம் தொடர்பில் குறிப்பிட்டால் 2021ல் வருமானம் இல்லை 41 மில்லியன் நஸ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2022ல் 5 மில்லியன் வருமானம், நஸ்டம் 82 மில்லியன், 2023ல் வருமானம் 152 மில்லியன் எனவும் தெரிவித்துள்ளார்.

182 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் பலாலியில் சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிப்பதாக  இருந்தால், ஓடுபாதை, நுழைவு பாதை தரிப்பிடம் போன்ற ஏனைய வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என்பதோடு மேலதிக காணிகளையும் சுவீகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆகவே இது தொடர்பான சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து மேலதிக தகவல்களை கூறமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தால்  பெருமளவு நிதியைப் பயன்படுத்தும் மத்தள விமான நிலையத்தைப் போலல்லாமல், யாழ்ப்பாண விமான நிலையத்தை ஒரு வினைதிறனாக மாற்ற உறுதியாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில் யாழ்ப்பாண விமான நிலையத்திற்கு விமான நிறுவனங்களை ஈர்ப்பதற்காக விமானப் போக்குவரத்து கட்டணத்தை மேலும் குறைப்பது குறித்தும் அரசாங்கம் பரிசீலிக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்