ஜேர்மனி புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள Emma AI சுற்றுலா வழிகாட்டி

20 ஆவணி 2025 புதன் 17:32 | பார்வைகள் : 514
ஜேர்மன் அரசாங்கம் சுற்றுலா பயணிகளுக்கு உதவியாக Emma AI வழிகாட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜேர்மனி தனது சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில், Emma - Your AI Guide to Germany எனும் புதிய செயற்கை நுண்ணறிவு சேவையை வெளியிட்டுள்ளது.
இது Matador Network நிறுவனத்தின் GuideGeek AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
Emma, பயணிகளின் கேள்விகளுக்கு விரைவான மற்றும் தனிப்பயணக்கப்பட்ட பதில்களை வழங்கும் திறன் கொண்டது.
சுற்றுலா பயணிகள் WhatsApp அல்லது ஜேர்மனியின் Facebook பக்கத்தின் மூலம் Emma-வை அணுகலாம்.
பயணிகளின் எண்ணிக்கை, அவர்களின் வயது, விருப்பங்கள் போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு பரிந்துரைகளை வழங்குகிறது.
வரலாற்று சின்னங்கள், கலாச்சார இடங்கள், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் மறக்கப்பட்ட சிறிய இடங்கள் பற்றிய தகவல்களையும் வழங்குகிறது.
தேவைப்பட்டால் ஒரு சீரான முழு பயண திட்டங்களையும் உருவாக்கி தரும் திறனும் Emma-விற்கு உள்ளது.
மொத்தத்தில், ஜேர்மனியில் பயணம் செய்வது தொடர்பான எந்தவொரு கேள்வியையும் கேட்க Emma அனுமதிக்கிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1