ஊழல்தான் உங்கள் கூட்டணியின் அரசியலமைப்பு; அண்ணாமலை

21 ஆவணி 2025 வியாழன் 07:21 | பார்வைகள் : 137
குற்ற வழக்குகளில் சிக்கும் முதல்வர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜ முன்னாள் மாநிலதலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
30 நாட்கள் சிறையில் இருந்தால், பிரதமர், முதல் அமைச்சர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் புதிய சட்ட மசோதாவை லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதா அவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பதிவு: வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்து கீழ் கைது செய்யப்பட்ட ஒரு அமைச்சரை, இலாகா இல்லாத அமைச்சராக தக்க வைத்துக் கொண்ட உங்களின் வெட்கமில்லாத அரசை விட, கருப்பான அல்லது அவமானகரமானது வேறு எதுவும் இல்லை.
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, உங்களின் வெட்கமில்லாத அரசு, செந்தில் பாலாஜியை மீண்டும் அவர் முன்னர் வகித்த அதே அமைச்சர் பொறுப்பை வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் கடும் விமர்சனத்தைத் தொடர்ந்துதான் அந்த அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.
தொடர்ந்து வரும் விசாரணையில், உங்கள் அரசின் தாமதப்படுத்தும் முயற்சிகள் குறித்து, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கூறியதை நாங்கள் மீண்டும் சொல்ல வேண்டுமா? இன்டி கூட்டணியின் இன்னொரு ஊழல் வீரர் அரவிந்த் கெஜ்ரிவால், ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறை வைக்கப்பட்டிருந்தும், பல மாதங்களாக முதல்வர் பதவியைப் பிடித்துக் கொண்டிருந்தார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8(4) ஐ உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த போது, அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தண்டனை பெற உள்ள தங்கள் எம்எல்ஏக்களை பாதுகாக்க, அவசரத்தில் ஒரு ஆணையை கொண்டு வந்தது. இன்று கூட்டணியின் பெயர் மாறிவிட்டது, ஆனால் அதன் குறிக்கோள் அப்படியே உள்ளது.
130வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு நீங்கள் எதிர்ப்பது எங்களுக்கு எந்த ஆச்சரியமும் ஏற்படுத்தவில்லை. ஊழல் தான் உங்கள் கூட்டணியால் உண்மையில் பின்பற்றப்படும் ஒரே அரசியலமைப்பு, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1