எயார் பிரான்ஸ் - விமானப் பயணத்தில் ஐந்து பேர் காயம்!!

21 ஆவணி 2025 வியாழன் 11:38 | பார்வைகள் : 445
புதன்கிழமை பரிசில் இருந்து அஜாக்சியோ (Ajaccio) நோக்கி புறப்பட்ட AF 4236 விமானத்தில் பயணித்தவர்கள் அதிர்ச்சியூட்டும் அனுபவத்தைச் சந்தித்தனர். Air France தெரிவித்ததின்படி, "கடும் காற்றழுத்த அலைகள்" (ORTES TURBULENCES) காரணமாக 5 பேர் காயமடைந்தனர். இதில் மூவர் விமான பணியாளர்கள்.
பயணத்தின் போது ஏற்பட்ட அதிர்ச்சி!
பல நாள் கடும் வெப்பத்திற்குப் பின், பிரான்சின் பல பிராந்தியங்களை 20 ஆம் தேதி புதன்கிழமை கடும் இடியுடன் கூடிய மழையும் புயல்களும் தாக்கியது. இந்த மோசமான வானிலை சூழ்நிலை Paris-Orly இலிருந்து Ajaccio நோக்கிச் சென்ற Air France-ன் AF 4236 விமானத்தைப் பாதித்தது.
Air France வழங்கிய தகவலின்படி, அந்த விமானம் "கடும் இடியுடன் கூடிய புயலின் போது கடுமையான காற்றழுத்த அலைகளை சந்தித்தது". இதில் 5 பேர் காயமடைந்தனர். அ தில்2 பயணிகள் மற்றும் 3 விமான சேவை பணியாளர்களும் அடங்குவார்கள். அவர்கள் அப்போது பயணிகளின் பாதுகாப்புப் பட்டிகளை (ceintures de sécurité) சோதனை செய்து கொண்டிருந்தனர்.
இந்தச் சம்பவத்துக்குப் பின், விமானிகள், விமான நிலையத்தில் அவசர மருத்துவ உதவியை கேட்டனர். விமானம் தரையிறங்கியவுடன் மருத்துவக் குழு உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்தவர்களை கவனித்தது என Air France தெரிவித்துள்ளது.
அஜாக்சியோ விமான நிலையத்தில் Air France குழுவினரும் இணைந்து, AF 4236 விமானப் பயணிகளுக்கு உதவி வழங்கினர்.
"எங்கள் பயணிகளின் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே எங்களின் முதன்மை முன்னுரிமை ஆகும்." Air France என தனது அறிவிப்பில் மீண்டும் வலியுறுத்தியது :
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1