Paristamil Navigation Paristamil advert login

மருந்துகள் உட்பட அமெரிக்காவால் ஐரோப்பாவிற்கு 15% வரி உறுதி!!

மருந்துகள் உட்பட அமெரிக்காவால் ஐரோப்பாவிற்கு 15% வரி உறுதி!!

21 ஆவணி 2025 வியாழன் 15:39 | பார்வைகள் : 403


ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு வரிவிலக்கை பெற முயற்சித்தது, ஆனால் அது தோல்வியடைந்துள்ளது. 

இதன் விளைவாக, அமெரிக்கா மதுபானங்கள், வாகனங்கள் மற்றும் மருந்து தயாரிப்புகள் உள்ளிட்ட ஐரோப்பிய பொருட்களுக்கு 15% வரி விதிக்கிறது. இந்த புதிய வரி, 2025 ஜூலை இறுதியில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்துடன் EU செய்த வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் அமுலுக்கு வந்துள்ளது.

முன்பு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்நு அமெரிக்கா வரும் வாகனங்களுக்கு வெறும் 2.5% வரி மட்டுமே இருந்தது. டிரம்ப் ஏப்ரலில் 25% வரி விதித்ததை ஒப்பிடுகையில், புதிய 15% வரி சற்று குறைவாகும். மருந்துகள் இதற்குமுன் வரிவிலக்காக இருந்தாலும், இப்போது அவையும் வரிக்குட்படுத்தப்பட்டுள்ளன. 

பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் இந்த மாற்றத்துக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளன, ஏனெனில் அவை அமெரிக்க சந்தையைப் பெரிதும் நம்பியிருந்தன.

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்