வட கொரியாவின் ரகசிய ஏவுகணை தளம்... அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்

21 ஆவணி 2025 வியாழன் 20:10 | பார்வைகள் : 221
சீனாவுடனான வடக்கு எல்லைக்கு அருகில் வட கொரியா அமைத்துள்ள ரகசிய ஏவுகணை தளத்தால் கிழக்கு ஆசியா மற்றும் அமெரிக்காவின் பெரும்பகுதிக்கு கடுமையான அணுசக்தி அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
சீன எல்லையிலிருந்து வெறும் 27 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது வட கொரியாவின் சின்பங்-டோங் ஏவுகணைத் தளம்.
இங்கு 9 அணுசக்தி பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் அதன் வாகனம் உட்பட பாதுகாக்க முடியும் என்றே நம்பப்படுகிறது.
இந்த தளமானது வட கொரியாவால் இதுவரை அறிவிக்காத 15 முதல் 20 பாலிஸ்டிக் ஏவுகணை தளங்கள் மற்றும் அணுஆயுதங்கள் சேமிப்பு வசதிகளில் ஒன்றாகும்.
இந்த ரகசிய தளம் கிழக்கு ஆசியாவிற்கும் அமெரிக்கா கண்டத்திற்கும் அணு ஆயுத அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்றே ஆய்வறிக்கை ஒன்று எச்சரிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக கிம் ஜாங் உன் தலைமையின் கீழ் வட கொரியா தனது ஆயுதத் திட்டத்தை அதிகரித்துள்ளது,
அதன் ஆயுதப் படைகளை விரைவாக நவீனமயமாக்கி, புதிய ஆயுதங்களை உருவாக்கியுள்ளது. மட்டுமின்றி, அமெரிக்காவில் கிட்டத்தட்ட எந்த மாகாணத்தையும் தாக்கக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதனை செய்துள்ளது.
ரஷ்யா உடனான வட கொரியாவின் சமீபத்திய நெருக்கம், அந்த நாட்டிற்கு அதி நவீன தொழில்நுட்பங்களை சாத்தியமாக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த ரகசிய தளம் வட கொரியாவின் அணுசக்தி திட்டத்தை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதி என்றே கூறுகின்றனர்.
சீனாவிற்கு மிக அருகில் தளங்களை அமைப்பதன் மூலம், தாக்குதலைத் தடுக்க அரசியல் ஆதாயங்களைப் பயன்படுத்திக் கொள்ள வட கொரியாவால் முடியும்.
செயற்கைக்கோள் படங்களின்படி, தளத்தின் கட்டுமானம் 2004 இல் தொடங்கியது, மேலும் இது 2014 முதல் செயல்பட்டு வருவதாக அறிக்கை கண்டறிந்துள்ளது.
மேலும், தளத்தில் எந்த மாதிரியான பாலிஸ்டிக் ஏவுகணை சேமிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பிலான தகவல் ஏதும் தெளிவாகத் தெரியவில்லை என்றே ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வட கொரியாவிடம் 40 முதல் 50 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்றே நம்ப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1