Paristamil Navigation Paristamil advert login

மெஸ்ஸி எவ்வளவு காலம் காணாமல்போவார்?அரையிறுதிக்கு அழைத்துச் சென்ற வீரரால் சந்தேகம்

மெஸ்ஸி எவ்வளவு காலம் காணாமல்போவார்?அரையிறுதிக்கு அழைத்துச் சென்ற வீரரால் சந்தேகம்

22 ஆவணி 2025 வெள்ளி 06:12 | பார்வைகள் : 163


லீக்ஸ் கிண்ணத் தொடரின் காலிறுதியில் வெற்றி பெற்ற இன்டர் மியாமி அணி, அரையிறுதியில் ஓர்லாண்டோ சிட்டியை எதிர்கொள்கிறது.

 

சேஸ் மைதானத்தில் நடந்த லீக்ஸ் கிண்ணம் (Leagues Cup) காலிறுதிப் போட்டியில் இன்டர் மியாமி (Inter Miami) மற்றும் டைக்ரெஸ் யுஏஎன்எல் (Tigres UANL) அணிகள் மோதின.

 

இந்தப் போட்டியில் லூயிஸ் சுவாரெஸ் (Luis Suarez) அதகளம் செய்தார். 23வது நிமிடத்திலும், 89வது நிமிடத்திலும் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அவர் கோல்கலாக மாற்றினார்.

 

 

டைக்ரெஸ் அணிக்கு ஏஞ்செல் கோர்ரியா (Angel Correa) மூலம் ஒரு கோல் கிடைக்க, இன்டர் மியாமி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

 

இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) மைதானத்தில் தோன்றினார். ஆனால், அவர் மைதானத்தில் கால் வைக்கவில்லை.

 

அவரது பங்களிப்பு இல்லாத நிலையில், உருகுவே நட்சத்திரம் சுவாரெஸ் தமது அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார்.

 

 

அவர் மெஸ்ஸியை மறைத்து தனது ஆட்டத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தார். அதே சமயம் மெஸ்ஸி இதுபோல் எவ்வளவு காலம் காணாமல் போவார் என்பதுதான் பதிலளிக்கப்படாத கேள்வியாக உள்ளது.

 

ஏனெனில், அணியுடன் பயணம் செய்த மெஸ்ஸி ஜெர்ஸியை அணியவில்லை. கிளப் இதுகுறித்து எந்த விளக்கத்தையும் தரவில்லை.

 

மேலும் Lineupஐ மெஸ்ஸியின் பெயர் இல்லாமல் வெளியிட்டது. தசை காயத்தில் இருந்து திரும்பி வந்த மெஸ்ஸி, LA கேலக்சி அணிக்கு எதிராக ஒரு கோல் அடித்தார்.

 

எனவே அவரது பெயர் விடுபட்டதும் அது உடனடியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. அரையிறுதிக்கு முன்னேறிய மியாமி, 28ஆம் திகதி ஓர்லாண்டோ சிட்டி அணியை எதிர்கொள்கிறது.

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்