தமிழகத்துக்கு என்ன செய்தீர்கள்? கனிமொழிக்கு சீமான் கேள்வி

22 ஆவணி 2025 வெள்ளி 08:45 | பார்வைகள் : 155
பா.ஜ., தமிழகத்துக்கு என்ன செய்தது என்று கேள்வி கேட்கும் நீங்கள், தமிழகத்துக்கு என்ன செய்தீர்கள்?'' என, கனிமொழியை நோக்கி, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
திருச்சியில் அவர் அளித்த பேட்டி; தெருநாய்களை முன்பே கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். கட்டுப்படுத்தவில்லை என்றால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். த.வெ.க., மாநாடு கட்சியின் மாநாடு. மாநாட்டுக்கு முந்தைய நாளே பலர் சென்றுள்ளனர். நாட்டில் வேலை, வெட்டி இல்லாமல் எவ்வளவு பேரு உள்ளனர் என்பதையே இது காட்டுகிறது.
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தரும் விஷயத்தில், பா.ஜ., கொள்கையில் தி.மு.க., மாறுபடுகிறது என தி.மு.க., - எம்.பி., கனிமொழி கூறியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, 'தமிழகத்துக்கு சி.பி.ராதா கிருஷ்ணன் செய்தது என்ன' என்றும் கேட்டுள்ளார். நான் கேட்கிறேன், 'கனிமொழியே தமிழகத்துக்கு என்ன செய்தீர்கள்?' என கேட்பதற்கு எவ்வளவு நேரமாகும்.
மத்திய அரசு நடத்திய 'ஆப்பரேஷன் சிந்துாரை' ஆதரித்து வெளிநாடுகளுக்கு இந்திய அரசு பிரதிநிதியாக சென்றபோது, 'தமிழுக்கும், தமிழருக்கும் பா.ஜ., என்ன செய்தது?' என ஏன் கேட்கவில்லை?
திராவிடம் என்பது சமஸ்கிருத சொல். மாடல்என்பது ஆங்கில சொல். இது இரண்டையும் இணைத்து வைத்துதான்,பித்தலாட்டம் செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்துள்ளனர். அதற்காக சட்டம் கொண்டு வந்துள்ளனர். அதை மனதார வரவேற்கிறேன். தெருவுக்கு தெரு மதுக்கடைகளை திறந்து வைத்து விட்டு, தமிழக அரசு போதையை ஒழிப்பேன் என கூறினால், யாரும் அதை நம்ப வேண்டுமா?
குடிசை ஒழிப்பு என்று கூறி, குடிசைகளை கொளுத்தி விடுவது மாதிரி, மது ஒழிப்பு எனக் கூறி, மதுவை குடித்து விட்டுத்தான் ஒழிக்க முடியுமா? இவ்வாறு சீமான் கூறினார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1