Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சமூக ஊடகங்களில் பரவும் போலி கடிதம் குறித்து எச்சரிக்கை

இலங்கையில் சமூக ஊடகங்களில் பரவும் போலி கடிதம் குறித்து எச்சரிக்கை

22 ஆவணி 2025 வெள்ளி 09:24 | பார்வைகள் : 4853


இலங்கையில் பொலிஸ் மா அதிபர் மற்றும் மூத்த அதிகாரிகளால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணம் என்று பொய்யாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவும் ஒரு போலி கடிதம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் இலங்கை பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளது. 

போலியான பெயர்கள் மற்றும் கையொப்பங்களைக் கொண்ட இந்தக் கடிதம், பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் வகையில் வேண்டுமென்றே, பரப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. 

குறித்த ஆவணத்தை உருவாக்கிப் பகிர்ந்ததற்குப் பொறுப்பானவர்களைக் கண்டறியக் கணினி குற்றப்பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்