Paristamil Navigation Paristamil advert login

கையில் கருங்காலி கோல் ஸ்டாலினை தொடர்ந்து பிரேமலதா

கையில் கருங்காலி கோல் ஸ்டாலினை தொடர்ந்து பிரேமலதா

23 ஆவணி 2025 சனி 09:00 | பார்வைகள் : 163


தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, சமீபகாலமாக கையில் கருங்காலி கோல் ஒன்றை வைத்துக் கொண்டிருக்கிறார். போகும் இடங்களுக்கெல்லாம் மறக்காமல் அதை எடுத்துச் செல்கிறார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, 'நண்பர் பரிசாகக் கொடுத்தது. வைத்திருந்தால், நல்லது நடக்கும் எனச் சொன்னார்கள். அதனால் வைத்திருக்கிறேன்' என்றார். ஆனால், தே.மு.தி.க., வட்டாரங்களில் கூடுதல் கருத்துச் சொல்கின்றனர்.

ஜோதிடர்கள் அவர்கள் கூறியதாவது:

கருங்காலி கோல் கையில் வைத்திருந்தால், சிறப்பான எதிர்காலம் இருக்கும் எனச் சொல்லி, ஜோதிடர்கள் சிலர், அரசியல்வாதிகளிடம் தொடர்ச்சியாக சொல்லி வருகின்றனர்.

அந்த வகையில் தான், முதல்வர் ஸ்டாலினுக்கும் தகவல் போய், அவர் காலையில் வாக்கிங் போகும் போது, மறக்காமல் கருங்காலி கோல் எடுத்துச் செல்கிறார்.

இதேபோல, ஏற்கனவே விஜயகாந்திடமும் சில ஜோதிடர்கள் சொல்லி உள்ளனர். ஆனால், அதை விஜயகாந்த் நம்பவில்லை. அதனால், கருங்காலி கோல் பயன்படுத்தவில்லை.


தொடர் தோல்வி அரசியலில் அவருக்கு வரிசையாக சரிவு ஏற்பட்டதும், 'கருங்காலி கோல் வைத்திருந்தால், இந்த சரிவு ஏற்பட்டிருக்காது' என, விஜயகாந்தின் தொடர் தோல்விக்கு ஜோதிடர்கள் காரணம் கூறினர்.

இது பிரேமலதாவுக்கும் சென்றது. அதையடுத்தே, அவர் கருங்காலி கோல் பயன்படுத்தத் துவங்கி உள்ளார். தொடர்ந்து, கருங்காலி கோல் பயன்படுத்தினால், விஜயகாந்துக்கு ஏற்பட்ட தோல்வி போல, அரசியல் ரீதியில் தனக்கு பின்னடைவு ஏற்படாது என, பிரேமலதா நம்புகிறார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையில், விஜயகாந்த் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற விருத்தாசலம் தொகுதியில், வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட பிரேமலதா விரும்புவதாகவும், அதற்கான பணிகளைத் துவக்க, தன் கட்சியினருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்த தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, தன் கையில் கருங்காலி கோலுடன் கோவில் பிரகாரத்தை வலம் வந்தார்
 

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்