கேரளாவில் விளையாடும் மெஸ்ஸி! உறுதி செய்த அர்ஜென்டினா

23 ஆவணி 2025 சனி 13:49 | பார்வைகள் : 113
லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அணி கேரளாவில் விளையாடும் என AFA உறுதிப்படுத்தியுள்ளது.
அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இந்தியாவிற்கு வருகை தருவதாக சமீபமாக பேசப்பட்டு வந்தது.
எனினும் எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. குறிப்பாக கேரள கால்பந்து ரசிகர்கள் ஜாம்பவான் மெஸ்ஸியின் வருகை என சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்து வந்தனர்.
இந்த நிலையில் பல வாரங்களாக நிச்சயமற்ற தன்மை நிலவிய சூழலில், தற்போது லியோனல் மெஸ்ஸி கேரளாவுக்கு வருவது உறுதியாகியுள்ளது.
அவரது தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி நவம்பர் மாதம் கேரளாவுக்கு வருகை தர உள்ளது.
இதனை அர்ஜென்டினா கால்பந்து சங்கம் (AFA) வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளது.
திருவனந்தபுறத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் ஒரு சம்பிரதாய போட்டியில் மெஸ்ஸியின் அணி விளையாடும்.
செப்டம்பர் மாதம் வெனிசுலாவுக்கும் (5ஆம் திகதி), ஈக்வடார் (10ஆம் திகதி) அணிக்கும் எதிரான போட்டிகளுக்குப் பிறகு மெஸ்ஸி தலைமையிலான அணி கேரளாவுக்கு செல்லும்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1