Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் T3 டிராமில் தோழிக்காக தற்காப்பு செய்தவர், 5 முறை குத்தப்பட்டார்!!

பரிஸ் T3 டிராமில் தோழிக்காக தற்காப்பு செய்தவர், 5 முறை குத்தப்பட்டார்!!

23 ஆவணி 2025 சனி 14:21 | பார்வைகள் : 745


பரிஸில் T3 டிராமில் ஒரு இளம் ஜோடி பயணம் செய்து கொண்டிருந்த போது, ஒரு ஆண் பயணி அந்த பெண்ணை இழிவாகப் பேசியுள்ளார். அதற்கு அவரது தோழன் எதிர்வினை அளிக்க, வாக்குவாதம் மோதலாக மாறியது. இந்த மோதல் நள்ளிரவில் 00.30க்கு தொடங்கியுள்ளது.

இருவரும் Porte de Vanvesஇல் வெளியேறி சண்டைபோட்டுள்ளனர். அந்த நேரத்தில் சந்தேகநபர் கத்தி எடுத்து, இளைஞனை மார்பு மற்றும் வயிற்றில் 5 முறை குத்தியுள்ளார். காயமடைந்தவர் Georges-Pompidou மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்; அவரது உயிருக்கு ஆபத்து இல்லை.

தாக்கியவர் Boulevard Lefebvre பகுதியில் ஓடி மறைந்துள்ளார். போலீசார் சில நிமிடங்களில் அவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்; அவருடைய வலது கையில் இரத்தம் இருந்துள்ளது. அவரை சம்பவ இடத்திற்குக் கொண்டு சென்றபோது, ஒருவர் அவரை அடையாளம் காண்பித்துள்ளார். 

42 வயதுடைய சந்தேகநபர் ஏற்கனவே காவல் துறையினருக்கு பரீட்சயமானவர். தற்போது அவர் மீது "கொலை முயற்சி" என்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடர்கிறது.

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்