இனி எவரும் உக்ரைனைத் தொடக் கூடாது - நேட்டோ தலைவர்

23 ஆவணி 2025 சனி 15:49 | பார்வைகள் : 326
உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குமாறு நேட்டோ தலைவர் அழைப்பு விடுத்தார்.
எதிர்காலத்தில் இனி எவரும் உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டத்தை அது முறியடிக்க வேண்டும் என்றும் நேட்டோ தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா முன்னெடுத்த அமைதி பேச்சுவார்த்தைகளில் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
ஆனால், ட்ரம்பின் பேச்சுவார்த்தைகள் எதுவும் ரஷ்யாவிடம் எடுபடாத நிலையில், தற்போது உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்கள் அவசியம் என்றும்,
இதைத்தான் நாங்கள் தற்போது வரையறுக்கப் பணியாற்றி வருகிறோம் என்பதையும் நேட்டோ தலைவர் Mark Rutte தெரிவித்துள்ளார்.
மேலும், மேற்கத்திய நாடுகளின் சில பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் ஐரோப்பிய தலைவர்களிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால், பின்னர் இந்த விவகாரத்தில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
ரஷ்யாவின் ஒப்புதல் இல்லாமல் உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பதால் பலனேதும் இருக்கப்போவதில்லை என்றே ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் Sergei Lavrov தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், எந்தவொரு ஒப்பந்தத்தையும் ரஷ்யா நிலைநிறுத்தும் என்பதை உறுதிப்படுத்தவே உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவை என்று ரூட்டே கூறியுள்ளார்.
மேலும், பாதுகாப்பு உத்தவாதம் அளிக்கப்பட்டால் உக்ரைனின் ஒரு அடி நிலத்தைக் கூட கைப்பற்ற ரஷ்யா இனி முயற்சிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், யார் இராணுவ வீரர்களை வழங்குவார்கள், யார் உளவுத்துறையை வழங்க முடியும், யார் கடற்படை அல்லது விமானப்படையை வழங்குவார்கள்,
யார் நிதி வழங்கத் தயாராக உள்ளனர் என்பதை தற்போது உறுதி செய்ய முடியாது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் பாதுகாப்பில் எந்த நாடுகள் இணையும் என்பதில் தற்போது வெளிப்படுத்த முடியாது என்றாலும், கண்டிப்பாக அமெரிக்காவின் பங்களிப்பு உறுதி என்றே ரூட்டே தெரிவித்துள்ளார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
2