Seine-et-Marne : காவல்துறை வீரர் படுகாயம்!!

23 ஆவணி 2025 சனி 21:08 | பார்வைகள் : 1068
BAC காவல்துறை வீரர் ஒருவர் மகிழுந்து மோதித்தள்ளி படுகாயமடைந்துள்ளார். சாரதி ஒருவர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி பயணித்ததில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Meaux நகரின் தெற்கு பகுதியான Nanteuil-lès-Meaux (Seine-et-Marne) இல் இச்சம்பவம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. நள்ளிரவின் சற்று பின்னர் சந்தேகத்துக்கு இடமான மகிழுந்து ஒன்றை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
ஆனால் குறித்த நபர் காவல்துறையினர் அருகே மெதுவாக வந்து, பின்னர் திடீரென மகிழுந்தை வேகமாக இயக்கி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அதன் போது காவல்துறை வீரர் மகிழுந்து மோதி காயமடைந்தார்.
அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பி ஓடிய சாரதி கைது செய்யப்படவில்லை. விசாரணைகள் ஆரம்பிக்கப்படுள்ளன.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1