Paristamil Navigation Paristamil advert login

ஒர்லி பூங்காவில் இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!

ஒர்லி பூங்காவில் இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!

23 ஆவணி 2025 சனி 22:24 | பார்வைகள் : 509


ஒர்லி நகரில் உள்ள Georges-Méliès பூங்காவில், 3 மற்றும் 4 வயதுடைய இரண்டு சிறுவர்கள் நீர்நிலையில் மூழ்கி உயிரிழந்தது பெரும் துயர சம்பவமாகும். அவர்கள் உறவினர்கள் என்றும், அவர்கள் மூழ்கிய நீர்நிலை அலங்கார மயமாக அமைக்கப்பட்டிருந்தாலும், மக்கள் நீராடுவதற்கு அங்கு அனுமதி இல்லையென நகராட்சி தெரிவித்துள்ளது. 

மீட்பு பணியாளர்கள் குழந்தைகளை மீட்டும், நீண்ட நேர மீள்உயிர்ப்புச் செயல்களுக்கு பிறகும் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. இந்த கோடைக் காலத்தில் Val-de-Marne  பகுதியில் மூழ்கி உயிரிழக்கும் ஐந்தாவது சம்பவமாகும். 

இதற்கு முன்னதாக, 14 வயது இளைஞர், 11 வயது ஆட்டிசம் கொண்ட சிறுவன் மற்றும் 40 வயது ஆண் என மூன்று பேரும் வெவ்வேறு இடங்களில் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த நிகழ்வுகள், பொதுநிலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன.

10 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    2

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்