ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனின் புதிய தாக்குதல் திட்டம்...

24 ஆவணி 2025 ஞாயிறு 13:01 | பார்வைகள் : 263
ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான உக்ரைன் தாக்குதல்களின் அதிரடியான அதிகரிப்பு ரஷ்யாவில் பெட்ரோல் விலையை சாதனை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
உள்ளூரில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க பெட்ரோல் ஏற்றுமதியை விளாடிமிர் புடின் அரசாங்கம் மொத்தமாக தடை செய்திருந்த போதிலும், விலை உச்சம் கண்டுள்ளது.
ஜனாதிபதி ட்ரம்ப் முன்னெடுத்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வி கண்டுள்ள நிலையில், ரஷ்ய போர் முயற்சிகளை சேதப்படுத்தும் நோக்கில், சுத்திகரிப்பு நிலையங்கள், பம்பிங் நிலையங்கள் மற்றும் எரிபொருள் ரயில்கள் மீது ட்ரோன் தாக்குதல்களை உக்ரைன் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.
மட்டுமின்றி, ரஷ்யாவில் அன்றாட வாழ்க்கை பாதிக்கும் வகையிலும் உக்ரைன் நடவடிக்கை எடுத்து வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, கோடைகாலம் என்பதால் ரஷ்யாவின் சாரதிகள் மற்றும் விவசாயிகளிடையே பெட்ரோலுக்கானத் தேவை உச்சம் கண்டுள்ளது.
இந்த மாதத்தில் மட்டும் குறைந்தது பத்து முக்கிய ரஷ்ய எரிபொருள் வசதிகளை உக்ரேனிய ட்ரோன்கள் சேதப்படுத்தியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. உக்ரைனின் இந்த அதிரடித் திட்டம் கை மேல் பலன் அளித்துள்ளது.
சேதப்படுத்தப்பட்ட சுத்திகரிப்பு நிலையங்கள் ஆண்டுதோறும் 44 மில்லியன் டன்களுக்கும் அதிகமான பெட்ரோல் பொருட்களை உற்பத்தி செய்து வந்துள்ளன. உக்ரைன் இலக்குகளில் சிக்கிய சுத்தீகரிப்பு நிலையங்களில் வோல்கோகிராடில் அமைந்துள்ள தெற்கு ரஷ்யாவின் மிகப்பெரிய லுகோயில் சுத்திகரிப்பு நிலையமும் ஒன்றாகும்.
ஆக்ஸ்ட் 14 ஆம் திகதி விடிகாலையில் ஒருமுறை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், 19 ஆம் திகதி மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. தெற்கு ரஷ்யாவிலுள்ள சரடோவில் அமைந்துள்ள இன்னொரு பெரிய சுத்திகரிப்பு நிலையமும் தாக்குதலில் சிக்கியுள்ளது.
இந்த நிலையில், பல ரஷ்ய பிராந்தியங்களிலும், உக்ரைனிடம் இருந்து வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்ட கிரிமியாவிலும் பெட்ரோல் பற்றாக்குறை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் கிரிமியாவில் செயல்படும் உக்ரைன் ஆதரவு சமூக செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவிக்கையில், மிகவும் பிரபலமான தரம் உயர்ந்த பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, மேலும் இது ரஷ்ய பொருளாதாரத்தின் மீது திட்டமிட்ட ட்ரோன் தாக்குதல் வேலை செய்ததன் விளைவு என தமது டெலிகிராம் செயலி குழுவில் பதிவு செய்துள்ளார்.
புடின் அரசாங்கம் மானியங்கள் வழங்கி வந்தபோதிலும், ரஷ்ய நுகர்வோர் எரிபொருள் நிலையங்களில் அதிக கட்டணம் செலுத்தும் நிலை தொடர்கிறது. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் எக்ஸ்சேஞ்சில் மொத்த பெட்ரோல் விலை இந்த மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 10% அதிகரித்துள்ளது.
ஆண்டின் தொடக்கத்திலிருந்து சுமார் 50% அதிகரித்துள்ளது. இராணுவத்தின் தேவை முக்கியமாக டீசல் என்பதால், அதன் விநியோகமும் அதிகமாக பாதிக்கப்படவில்லை என்பதால், அவர்களுக்கு பாதிப்பில்லை என்றே கூறப்படுகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3