ஒரு போர் விமானத்தின் சத்தம் போல நார்மண்டி கடற்கரையில் ஒரு பாறை சரிந்து விழுந்தது!!

24 ஆவணி 2025 ஞாயிறு 17:33 | பார்வைகள் : 754
Saint-Martin-aux-Buneaux (Seine-Maritime) உள்ள கடற்கரையில் ஒரு பெரிய பாறை வெள்ளிக்கிழமை மாலை இடிந்து விழுந்துள்ளது. இந்தக் காட்சியை சில சுற்றுலாப் பயணிகள் நேரில் பார்த்து வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.
"போர் விமானம் பறக்கும் சத்தம் போல" இருந்தது என்று அந்த நகரத்தின் துணை மேயரும், கடல்பாதுகாப்பு அமைப்புத் தலைவருமான பிலிப் துபோக் (Philippe Duboc) தெரிவித்துள்ளார்.
பாறை இடிந்தபோது, மிகப் பெரிய தூசிக் கூட்டு எழுந்ததாகவும், அந்த நிகழ்வு ஒரு பேரழிவு திரைப்படக் காட்சியைப் போல் தோன்றியது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் பகுதியில் மலைச்சரிவுகள் பொதுவாக நடைபெறும். இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று நகராட்சி தெரிவித்துள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3