அமெரிக்க தூதர், மக்ரோன் மற்றும் பிரெஞ்சு அரசாங்கத்தின் மீதும் குற்றச்சாட்டு!!

24 ஆவணி 2025 ஞாயிறு 20:36 | பார்வைகள் : 657
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனும் அவரது அரசும் யூத விரோதத்தை எதிர்க்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என அமெரிக்க தூதர் சார்லஸ் குஷ்னர் (Charles Kushner) கடிதம் மூலம் கடுமையாக கண்டித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு எதிரான கருத்துகள் மற்றும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முயற்சிகள் தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றன என்றும், பிரான்ஸில் வாழும் யூதர்களின் பாதுகாப்பை அச்சுறுத்துகின்றன என்றும் அவர் கூறியுள்ளார். அவர், "யூத விரோதம் (Antisémitisme)" என்பது யூத விரோதமே" என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பிரான்ஸில் யூதர்கள் தினசரி தாக்குதலுக்கு உள்ளாகுகிறார்கள் என்றும், பள்ளிகள், யூத வழிபாடு தலங்கள் சேதப்படுத்தப்படுகின்றன என்றும் தூதர் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் உள்ள அமெரிக்க பிரதிநிதி, "கிட்டத்தட்ட பாதி இளம் பிரெஞ்சு மக்கள் la Shoah (நாஜி ஆட்சி மற்றும் அதன் ஒத்துழைப்பாளர்களால் சுமார் 6 மில்லியன் யூதர்கள் திட்டமிட்ட மற்றும் அதிகாரத்துவ துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு அழிக்கப்பட்டதைக் குறிக்கிறது) பற்றி கேள்விப்பட்டதே இல்லை என்று கூறுவதால் " கோபமடைந்துள்ளார். "இத்தகைய அறியாமை தொடர்ந்து இருப்பது பிரெஞ்சு பாடசாலைகளில் உள்ள பாடத்திட்டத்தை கேள்விக்குள்ளாக்குகிறது," என்று அவர் மேலும் கூறியுள்ளார்
மக்ரோன், செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க உள்ளார் என்பதை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு மற்றும் அமெரிக்க தூதர் எதிர்க்கின்றனர். பிரான்ஸில் யூத-முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே இதுவே ஒரு நுணுக்கமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3