Paristamil Navigation Paristamil advert login

நீஸ் நகரில் துப்பாக்கிச்சூடு... இருவர் பலி! - ஐவர் காயம்!!

நீஸ் நகரில் துப்பாக்கிச்சூடு... இருவர் பலி! - ஐவர் காயம்!!

4 ஐப்பசி 2025 சனி 10:01 | பார்வைகள் : 397


நீஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதோடு, ஐவர் காயமடைந்துள்ளனர். மிகவும் பதட்டமான பரபரப்பான சூழல் அங்கு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 3, நேற்று வெள்ளிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீஸ் நகரின் Moulins பகுதியில் வீதியில் நின்றிருந்த குழுவினர் மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் இருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். ஐவர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் படுகாயமடைந்து அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தானியங்கி துப்பாக்கி ஒன்றின் மூலம் அவர்கள் சுடப்பட்டதாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள நீஸ் காவல்துறையினர் தெரிவித்தனர். அதேவேளை, போதைப்பொருள் வர்த்தகத்தின் பின்னணியில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்