Paristamil Navigation Paristamil advert login

”போர் நிறுத்தம் கைக்கெட்டிய தூரத்தில்..!” - மக்ரோன் உற்சாகம்!!

”போர் நிறுத்தம் கைக்கெட்டிய தூரத்தில்..!” - மக்ரோன் உற்சாகம்!!

4 ஐப்பசி 2025 சனி 11:01 | பார்வைகள் : 529


அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொண்டுவந்த 20 நிபந்தனைகள் கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதை அடுத்து, போர் நிறுத்தம் கைக்கெட்டும் தூரத்தில் வந்துவிட்டதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உற்றாசகம் வெளியிட்டுள்ளார்.

”பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் முன்னவந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தாமதமின்றி நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் எனவும், இப்போது நாம் அமைதியை நோக்கி தீர்க்கமாக நகரும் வாய்ப்பு உள்ளது எனவும் மக்ரோன் மேலும் குறிப்பிட்டார்.

அத்தோடு போர் நிறுத்தம் கைக்கெட்டிய தூரத்தில் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

பாலஸ்தீனத்தில் இடம்பெறும் இரண்டுவருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் இந்த 20 அம்சங்களைக் கொண்ட ஒப்பந்ததைக் கொண்டுவந்திருந்தார். அதனை தற்போது ஹமாஸ் அமைப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்