Paristamil Navigation Paristamil advert login

பயணியர் ரயில் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்

பயணியர் ரயில் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்

5 ஐப்பசி 2025 ஞாயிறு 10:20 | பார்வைகள் : 264


கீவ் நகருக்குச் சென்று கொண்டிருந்த பயணியர் ரயில் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , 30 பேர் காயமடைந்துள்ளனர்.

உடனடியாக மீட்புப் படையினரும் வைத்தியர் குழுவும் சம்பவ இடத்துக்கு விரைந்து, காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

ரஷ்யாவின் இந்தத் தாக்குதலைக் கண்டித்த உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீர் ஸெலென்ஸ்கி,


பொதுமக்கள் பாதிக்கப்படுவர் என்று தெரிந்தும் தாக்குதல் நடத்துவது என்பது தீவிரவாதம் இதனை உலக நாடுகள் ஏற்கக் கூடாது என தெரிவித்தார்.

ரஷ்யாவின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களால் உக்ரைனின் மின் கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு, 50,000 குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

போர் தொடங்கியதிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலம் நெருங்கும்போது, உக்ரைனின் மின் கட்டமைப்பை ரஷ்ய படைகள் தாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்