Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் இமயமலையில் ரஜினி!

மீண்டும் இமயமலையில் ரஜினி!

5 ஐப்பசி 2025 ஞாயிறு 16:06 | பார்வைகள் : 174


பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென இமயமலை பயணம் சென்றுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராகவும், இந்திய சினிமாவின் மிகப்பெரும் அடையாளமாகவும் விளங்குபவர் ரஜினிகாந்த். சினிமா தவிர்த்து ஆன்மீகத்தில் தீவிர நாட்டம் கொண்டவரான ரஜினிகாந்த் மன அமைதிக்காக இமயமலை செல்வது வழக்கம்.

சமீபத்தில் இவரது கூலி படம் வெளியாகி ஹிட் அடித்த நிலையில், ஜெய்லர் 2 படத்திற்கான பணிகளும் முடிந்துள்ளன. தொடர்ந்து நடிப்பு பணிகள் இருந்ததால் அவற்றை முடித்துக் கொண்டு தற்போது இமயமலைக்கு பயணம் புறப்பட்டுள்ளார் ரஜினிகாந்த்.

அவர் எளிமையாக சாலையில் நின்று சாப்பிடும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. இன்று பத்ரிநாத் செல்லும் ரஜினிகாந்த் அங்கிருந்து பாபா குகைக்கு சென்று சில நாட்கள் தியானத்தில் இருக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்