Paristamil Navigation Paristamil advert login

ஹமாஸ் தாக்குதலின் இரண்டாவது வருடம்! - பரிசில் ஆர்ப்பாட்டம்!!

ஹமாஸ் தாக்குதலின் இரண்டாவது வருடம்! - பரிசில் ஆர்ப்பாட்டம்!!

5 ஐப்பசி 2025 ஞாயிறு 17:16 | பார்வைகள் : 301


ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் மேற்கொண்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியாக உள்ள நிலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை விடுவிக்கக்கோரி பரிசில் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Place de la République பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் ஒக்டோபர் 7, செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற உள்ளது. ஒக்டோபர் 7, 2023 ஆம் ஆண்டு ஹமாஸ் ஆயுதக்குழு இசை நிகழ்ச்சி ஒன்றில் தாக்குதல் நடத்தி, 1,219 பேரைக் கொன்று குவித்ததோடு, 251 பேர் வரையானவர்களை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். அவகளுக்காக உருவாக்கப்பட்ட “Tous 7 octobre” எனும் அமைப்பினரே இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

பணயக்கைதிகளில் 47 பேர் இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ளனர். இந்நிலையில் இந்த இரண்டு வருட இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் காஸா பகுதியில் வசிக்கும் 67,074 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

வர்த்தக‌ விளம்பரங்கள்