Paristamil Navigation Paristamil advert login

புற்றுநோயை விரட்டும் கொய்யா

புற்றுநோயை விரட்டும் கொய்யா

27 ஐப்பசி 2020 செவ்வாய் 06:25 | பார்வைகள் : 9730


 கொய்யா பழத்தில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. குறிப்பாக அதிக அளவு வைட்டமின்-சி, நார்ச்சத்துக்கள், இரும்பு சத்து, வைட்டமின்-ஏ, மெக்னீசியம், வைட்டமின் பி-6, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால் கொய்யா பழத்தை உணவோடு அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். கொய்யா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 நன்மைகள் இதோ...


1. உடல் எடை குறையும்

 
கொய்யா பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் கொய்யா பழத்தில் கிட்டத்தட்ட 5 கிராம் அளவுக்கு நார்ச்சத்து இருக்கிறது. அதனால் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகளில் கொய்யா முக்கிய பங்கு வகிக்கிறது.

2. ரத்த சோகையை போக்கும்

கொய்யா பழத்தில் அதிக அளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதனை தினமும் உட்கொள்ளும்போது ரத்த சோகை போன்ற பிரச்சனைகள் வராமல் காக்கும். மேலும் உடலில் ரத்த உற்பத்தியினை அதிகரிக்கும்.

3. சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும்

கொய்யா பழத்தில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதனை உண்டு வரும்போது ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். எனவே சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் கொய்யா பழம் உண்டு வந்தால் அவர்களின் ரத்த சர்க்கரையின் அளவு சீரடையும்.

4. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

கொய்யா பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

5. புற்று நோய் வராமல் காக்கும்

கொய்யா பழத்தில் உள்ள ஆன்டிஆக்சிடென்டுகள் புற்று நோய் வராமல் காக்க உதவுகிறது. தினமும் ஒரு கொய்யா பழத்தினை உண்டு வருபவர்களுக்கு புற்று நோய் வரும் வாய்ப்பு மிக மிக குறைவு என பல்வேறு ஆய்வுகள் சான்று பகிர்கின்றன.

6. ரத்த அழுத்தத்தை குறைக்கும்

கொய்யா பழத்தில் சிறந்த அளவு பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் ரத்த அழுத்தமானது கட்டுக்குள் இருக்கும். மேலும் உயர் ரத்த அழுத்தத்தினை குறைத்து சீராக வைக்கும்.

7. ஆரோக்கியமான செரிமானம்

கொய்யா பழத்தினை அதிக அளவு உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலமானது ஆரோக்கியமாக இருக்கும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்