Paristamil Navigation Paristamil advert login

பிக்பாஸ் வீட்டுக்குள் வெடித்த சண்டை வெளியேற்றப்படும் போட்டியாளர் இவரா?

பிக்பாஸ் வீட்டுக்குள் வெடித்த சண்டை  வெளியேற்றப்படும் போட்டியாளர் இவரா?

6 ஐப்பசி 2025 திங்கள் 12:13 | பார்வைகள் : 198


பிக்பாஸ் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த, 'பிக்பாஸ் தமிழ் சீசன் 9' நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக துவங்கியது. கடந்த சீசனை நேர்த்தியாக தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி தான் இந்த முறையும், பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் பிக்பாஸ் வீடு இந்த முறை கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த சில புரோமோக்களையும் விஜய் டிவி தரப்பு வெளியிட்டது.

முதல் போட்டியாளராக பிக்பாஸ் ரசிகர்களுக்கே ஷாக் கொடுக்கும் விதத்தில் வாட்டர் மிலன் திவாகர் வீட்டுக்குள் நுழைந்த நிலையில், இவரை தொடர்ந்து பலூன் அக்கா அரோரா, FJ , விக்கல்ஸ் விக்ரம், கனி, ரம்யா ஜோ, சபரி நாதன், கெமி, ஆதிரை, கானா வினோத், பிரவீன் காந்தி, கம்ருதீன், விஜே பார்வதி, பிரவீன் தேவசகாயம், அப்சரா, சுபிக்ஷனா, துஹார், நந்தினி, அகோரி கலையரசன் உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் உள்ளே வந்தனர்.

குறிப்பாக பல திறமையானவர்கள் இருக்கும் போது , திவாகர் மற்றும் கலையரசன் போன்றவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தேவையா என்கிற விமர்சனங்களையும் நெட்டிசன்கள் சிலர் வெளிப்படையாக கூறி விமர்சிக்க துவங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஆரவாரத்தோடு துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில், முதல் நாளே ஒருவர் வெளியேற்றப்படுவதை உறுதி செய்யும் விதமாக முதல் புரோமோ அமைந்தது. அதாவது பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும், யாரேனும் ஒருவரை (இவர் ஒரு நாள் உள்ளே இருந்தால் மட்டும் போதும்) இதற்க்கு மேல் இவரிடம் சரக்கு இல்லை என நினைப்பவர்களை வெளிப்படையாக ஓபன் நாமினேஷன் செய்ய வேண்டும். இதில் அதிக பட்சமாக திவாகர் மற்றும் கலையரசன் தான் ஓட்டு வாங்கி உள்ளதால். இவர்கள் இருவரில் ஒருவர் இன்று அல்லது நாளை வெளியேற்றப்படலாம் என கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில், கெமி மற்றும் கம்ரூதினுக்கு சண்டை முட்டிக்கொண்டுள்ளது. "கெமி ஏதோ சொல்ல அதற்க்கு கம்ரூதின், இங்க தண்ணீர் எங்கே இருக்கு என கேள்வி எழுப்ப அது விவாதமாக மாறுகிறது. கெமி... கம்ரூத்தினை பார்த்து குரலை உயர்த்தாதீங்க என்று சொல்ல அதற்க்கு அவர் அப்படிதான் பேசுவேன் என ஆவேசமாக பேசுகிறார். பின்னர் நல்லது செய்தாலும் கெட்டவனாக தான் பார்ப்பார்கள் என கூறியபடி அங்கிருந்து செல்கிறார். கெமியும் நீங்கள் பேசுவதால் நேரம் தான் வீணாகிறது என கூறுகிறார். இப்படியான நிலையில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்கிற ஆர்வம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்