Paristamil Navigation Paristamil advert login

வெற்றிமாறனுடன் கைகோர்த்த ஹரிஷ் கல்யாண்?

வெற்றிமாறனுடன் கைகோர்த்த ஹரிஷ் கல்யாண்?

6 ஐப்பசி 2025 திங்கள் 13:13 | பார்வைகள் : 176


தமிழ் சினிமாவில் முக்கியமான இளம் நடிகர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் ‘நூறு கோடி வானவில்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் டீசல் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை சண்முகம் முத்துசாமி இயக்க தர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. திபு நினன் தாமஸ் இதற்கு இசையமைத்துள்ளார். ஆக்ஷன் கலந்த கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் அதுல்யா ரவி, வினய் ராய், அனன்யா, விவேக் பிரசன்னா, காளி வெங்கட், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் படத்திலிருந்து போஸ்டர்கள், பாடல்கள், டீசர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இயக்குனர் வெற்றிமாறனும் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய படங்களில் கதைச் சுருக்கத்தை சொல்வது போல டீசல் படத்திற்கும் வாய்ஸ் ஓவர் கொடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் பார்க்கிங், லப்பர் பந்து ஆகிய படங்கள் ஹரிஷ் கல்யாணுக்கு மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்த நிலையில் ‘டீசல்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்