Paristamil Navigation Paristamil advert login

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!

6 ஐப்பசி 2025 திங்கள் 18:04 | பார்வைகள் : 1354


 

இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில்  சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

ஏற்கனவே கடந்த மாத ஆரம்பத்தில் இந்தப் பிரேரணையின் முதலாவது வரைபு சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் அதில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன.

அந்தவகையில் திருத்தப்பட்ட இறுதி வரைபு இன்று சமர்ப்பிக்கப்பட்டு, இன்றைய தினமே வாக்கடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

வர்த்தக‌ விளம்பரங்கள்