Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யாவின் எண்ணெய் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்

ரஷ்யாவின் எண்ணெய் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்

7 ஐப்பசி 2025 செவ்வாய் 10:28 | பார்வைகள் : 225


ரஷ்யாவின் முக்கியமான எண்ணெய் நிலையம் மற்றும் வெடிபொருள் தொழிற்சாலையை ட்ரோன் மூலம் தாக்கியதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

மேற்கு ரஷ்யாவில் உளள் நிஸ்னி நோவ்கோரோடு மாகாணத்தில் உளள் ஸ்வெர்ட்லோவ் வெடிபொருள் தொழிற்சாலை தாக்கப்பட்டதாக உக்ரைன் ஜெனரல் ஸ்டாஃப் தெரிவித்துள்ளார்.

அங்கு வெடிச்சத்தம் கேட்டதாகவும், தீப்பிடித்து எரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


ரஷ்யப் படைகளுக்கு வெடிபொருட்கள் வழங்கும் முக்கிய தொழிற்சாலைகளில் ஒன்றாக இந்த தொழிற்சாலை திகழ்ந்து வருகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்