Paristamil Navigation Paristamil advert login

வாட்ஸ்அப்பில் மொபைல் எண் இல்லாமலே செய்தி அனுப்பலாம் - வருகிறது புதிய அம்சம்

வாட்ஸ்அப்பில் மொபைல் எண் இல்லாமலே செய்தி அனுப்பலாம் - வருகிறது புதிய அம்சம்

7 ஐப்பசி 2025 செவ்வாய் 11:28 | பார்வைகள் : 134


வாட்ஸ்அப்பில் மொபைல் எண் இல்லாமலே பயனர் பெயரை வைத்துதொடர்பு கொள்ளும் அம்சம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.

வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

வாட்ஸ்அப்பில் ஒருவர் மற்றவரை தொடர்பு கொள்ள அவரின் மொபைல் எண் தெரிந்திருந்தால் மட்டுமே அதன் மூலம் தொடர்பு கொள்ள முடியும்.

இதன் காரணமாக வாட்ஸ்அப் பயனர்கள் தனிப்பட்ட எண்களை பகிர வேண்டிய கட்டாய சூழல் இருந்தது.

இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியில் மொபைல் எண்ணை பகிராமலே, வாட்ஸ்அப் செயலியில் தொடர்பு கொள்ளும் வகையில் புதிய அப்டேட் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதில், இன்ஸ்டாகிராமில் உள்ளது போல், வாட்ஸ்அப்பில் பயனர் பெயர் (Username) மூலம் தொடர்பு கொள்ள முடியும்.

மேலும், Username உருவாக்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, WWW என தொடங்கும் Username உருவாக்க முடியாது. மேலும், Username இல் கட்டாயமாக ஒரு எழுத்து இடம்பெற வேண்டும். எண்கள் மற்றும் அடிக்கோடுகள் போன்ற சில குறியீடுகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும், தனியுரிமையை பாதுகாக்கும் வகையில், பயனர் பெயர் உருவாக்கும் போது, ரகசிய எண் வழங்கப்படும். இந்த பயனர் பெயர் மற்றும் ரகசிய எண் ஆகிய இரண்டும் வைத்திருப்பவர் மட்டுமே உங்களுக்கு செய்தி அனுப்ப முடியும்.

இதன் மூலம், தேவையற்ற ஸ்பேம் செய்திகள் மற்றும் மோசடி குறுஞ்செய்திகள் ஆகியவை தவிர்க்கப்படும்.

தற்போது இந்த அம்சம் பீட்டா சோதனையில் உள்ள நிலையில், விரைவில் பயன்பாட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.    

 

வர்த்தக‌ விளம்பரங்கள்