காதல் கடைசி வரை நிலைக்கணுமா?

7 ஐப்பசி 2025 செவ்வாய் 16:51 | பார்வைகள் : 141
சிலர் காதலுக்காக எதையும் செய்வார்கள். தங்களுக்கு பிடிக்காததைக் கூட பிடித்தது போல் நடிப்பார்கள். தங்கள் காதலிக்கு பிடிக்கும் என்ற ஒரே காரணத்திற்காக திடீரென்று கிரிக்கெட், ஓவியம் அல்லது கிளாசிக்கல் இசையின் மீது ஆர்வத்தை வளர்த்துக் கொள்வது. இப்படி நிறையச் சொல்லலாம்.
முதலில், இந்த செயல்கள் அழகாகவும் பாதிப்பில்லாததாகவும் தோன்றினாலும் கொஞ்சம் கொஞ்சமாக கனமான எதிர்பார்ப்புகளாக வளரும். உங்களுக்கு ஒருபோதும் பிடிக்காத பொழுதுபோக்கு அல்லது பழக்கத்தில் ஈடுபடுவதை கற்பனை செய்து பாருங்கள்; இது காலப்போக்கில் நீங்கள் நீங்களாக இருப்பதற்குப் பதிலாக போலியான உணர்வுக்கு வழிவகுக்கும். ஒருவரை ஈர்க்க வேண்டும் என்பதற்காக நீங்கள் ஒருபோதும் சமரசம் செய்யக்கூடாத 5 விஷயங்களை தெரிந்துகொள்ளலாம்.
எளிதில் இன்னொருவரின் கைப்பாவை ஆகுதல்
ஒருவருக்கு பிடித்தமானவராக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் கூறும் எந்தவொரு கருத்து அல்லது விருப்பத்துடனும் உடன்படுவது இருவருக்கிடையே வெறுமையான தொடர்பையே உருவாக்குகிறது. இருவருக்கும் இடையே சவால் செய்யவோ, விவாதிக்கவோ அல்லது தங்கள் சொந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவோ முடியாது என்றால், அந்த ஈர்ப்பு இருவரின் உண்மையான ஆளுமையை வெளிபடுத்துவதில்லை. ஒருவர் தொடர்ந்து மற்றொருவரின் கண்ணோட்டத்துடன் ஒத்துப்போகும்போது தனித்துவம் அழிக்கப்படுகிறது. இதன் காரணமாக நம்பகத்தன்மை இல்லாமல், பிணைப்பு ஆழமற்றதாகிறது. உறவுகளுக்குள் சமநிலை தேவையே தவிர ஒருதலைப்பட்சமான ஒப்புதல் அல்ல.
சிலர் தங்களது செல்வத்தையோ அல்லது ஆடம்பரத்தையோ காதலியிடம் காட்ட வேண்டும் என்பதற்காக விலையுயர்ந்த ஆடைகள், கேஜெட்களை வாங்குவது அல்லது ஆடம்பரமான இடங்களுக்கு அழைத்துச் செல்வது என செலவழிக்கிறார்கள். இதுபோன்ற வெற்றுப் பெருமையுடன் தொடங்கும் உறவுகள் பெரும்பாலும் மறைக்கப்பட்ட ஏற்றத்தாழ்வை உருவாக்குகின்றன. ஏனெனில் ஒருவர் தொடர்ந்து தன்னுடைய தரத்தை உயர்வாக காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். உண்மையான அன்பு என்பது உணர்ச்சிகள், பகிரப்பட்ட மதிப்பீடுகள் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றைச் சார்ந்தது. ஆடம்பர செலவு ஒருபோதும் அர்த்தமுள்ள பிணைப்பை உருவாக்காது.
ஒருவரின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக தனது கம்ஃபோர்ட் ஜோனை கைவிடும்போது, அங்கு சுயமரியாதை சமரசம் செய்யப்படுகிறது. தனிப்பட்ட வரம்புகளை மீறுவது விரக்தியை ஏற்படுத்துகிறது. ஒரு உறவில் இருவரின் தனிப்பட்ட எல்லைகள் கேடயமாகச் செயல்பட்டு, சுயம், நல்வாழ்வு மற்றும் சுய மதிப்பைப் பாதுகாக்கின்றன. ஒருவரிடம் இணக்கமாகத் தோன்ற அவரது வரம்புகளை மீறுவது தனிப்பட்ட அடையாளத்தில் நம்பிக்கையின்மையை எடுத்துக்காட்டுகிறது.
தன் காதலை வெளிப்படுத்த வேறொரு நபராக தன்னை காண்பிக்க முயற்சிக்கும் போது, அவர்கள் தவறான பிம்பத்தை உருவாக்குகிறார்கள். தனக்கு முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை முறையை பின்பற்றுவது போல் காண்பித்துகொள்வது எதிர்பார்ப்புகளை மட்டுமே ஏற்படுத்துகிறது; அவை இறுதியில் நொறுங்கிவிடும். இப்படி போலியாக நடிப்பது அழுத்தத்தை ஏற்படுத்தி, மன அழுத்தம் மற்றும் உள் மோதலுக்கு வழிவகுக்கிறது. ஒரு நபர் ஒவ்வொரு செயலையும் மற்றொருவரின் விருப்பங்களுக்கு ஏற்ப வடிவமைக்கும்போது, அவர்களின் தனித்துவம் மங்கிவிடும். அந்த உறவில் உண்மையே இருக்காது.
ஒருவரின் கவனத்தை ஈர்ப்பதற்காக உங்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ள நம்பிக்கைகளைக் கைவிடுவது தனிப்பட்ட அளவில் இழப்பை ஏற்படுத்துகிறது. குடும்ப உறவுகள், ஆன்மீகம், ஒழுக்கம் அல்லது வாழ்க்கை இலக்குகள் போன்ற அடிப்படை மதிப்புகள் ஒரு நபரின் முதுகெலும்பாக அமைகின்றன. இவை மற்றவர்களின் போற்றுதலுக்காகத் திரிக்கப்பட்டாலோ அல்லது கைவிடப்பட்டாலோ, உங்கள் அடையாளம் மங்கத் தொடங்குகிறது. பிறரின் ஒப்புதலுக்காக உங்களின் நம்பிக்கைகளை மறுவடிவமைப்பதை விட கொள்கைளில் உறுதியாக நிற்கும் ஒருவருக்கு தான் மக்கள் அதிக மரியாதை செலுத்துகிறார்கள். மேலும் சரணடைவதை விட வலிமை எப்போதும் அதிக ஈர்ப்புக் கொண்டது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1