Paristamil Navigation Paristamil advert login

பப்புவா நியூ கினியாவில் 6.8 சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் 6.8 சக்திவாய்ந்த நிலநடுக்கம்

8 ஐப்பசி 2025 புதன் 03:18 | பார்வைகள் : 103


பப்புவா நியூ கினியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம், சாலமன் கடலில் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் மையம் கிம்பே (Kimbe) நகரத்திற்கு தென்கிழக்கே சுமார் 194 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

நிலநடுக்கத்திற்குப் பிறகு, அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு (PTWC) ஆரம்பத்தில் சுனாமி அச்சுறுத்தல் எச்சரிக்கையை வெளியிட்டு, "சில கடற்கரைகளில் ஆபத்தான சுனாமி அலைகள் எதிர்பார்க்கப்படுகின்றன" என்று கூறியது.

இருப்பினும், அது பின்னர் ரத்து செய்யப்பட்டது. அதேவேளை பப்புவா நியூ கினியா, பசிஃபிக் ரிங் ஆஃப் ஃபயர் (Pacific Ring of Fire) பகுதியில் அமைந்துள்ளதால், அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது பொதுவானது. நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்புகள் அல்லது பெரும் சேதங்கள் குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் பதிவாகவில்லை.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்