மீண்டும் செயற்படத்தொடங்கிய MaPrimeRénov'!!

8 ஐப்பசி 2025 புதன் 11:56 | பார்வைகள் : 539
வீடுகளில் திருத்த வேலை செய்யவும், வெப்பமூட்டிகளை பொருத்தவும் கொடுப்பனவுகள் வழங்கும் MaPrimeRénov' நிறுவனம் சிறிய இடைவெளியின் பின்னர் மீண்டும் செயற்பட தொடங்கியுள்ளது.
நேற்று ஒக்டோபர் 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் இது மீள ஆரம்பிக்கப்பட்டது. 15,000 விண்ணப்பங்கள் தற்போது அவர்களிடம் உள்ளதாகவும், அவற்றில் 13,000 விண்ணப்பங்களை மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும் எனவும், அவற்றில் 1,700 விண்ணப்பங்கள் பெரிய அளவிலான திருத்தப்பணிகளைக் கொண்டவை எனவும் MaPrimeRénov' தெரிவிக்கிறது.
MaPrimeRénov' விண்ணப்பங்களில் மோசடி இடம்பெறுவதாக கருதப்பட்டு, மீளாய்வுக்கான நிறுவனம் சேவைகளை கடந்த ஜூலை மாதம் நிறுத்தியிருந்தது. புதிய கோரிக்கைகள் ஏற்பதையும் நிறுத்தியிருந்தது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1