Paristamil Navigation Paristamil advert login

இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளில் பிரதமர்!!

இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளில் பிரதமர்!!

8 ஐப்பசி 2025 புதன் 13:22 | பார்வைகள் : 597


பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ள பிரதமர் Sébastien Lecornu, இன்று புதன்கிழமை இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். பல்வேறு கட்சித்தலைமகளிடம் இன்று காலை முதல் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபட்டுள்ளார்.

வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றுவது குதிரைக் கொம்பு கதையாகிவிட்டது. இரண்டு பிரதமர்கள் மாற்றப்பட்டும், வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. பெரும்பான்மை இல்லாத அரசு திணறி வருகிறது. இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் பதவியை விட்டு விலகும் Sébastien Lecornu, இன்று காலை முதல் பல்வேறு கட்சித்தலைமைகளை சந்தித்து வருகிறார்.

முற்பகல் 11.15 மணி அளவில் communistes கட்சித் தலைவர்களுடனும், நண்பகல் 12.15 மணிக்கு Écologistes கட்சித்தலைவர்களுடனும் சந்திப்பை மேற்கொண்டார்.

நேற்று திட்டமிடப்பட்டிருந்த RN மற்றும் LFI கட்சித்தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட அழைத்திருந்தார். ஆனால் அவர்கள் அழைப்பை நிராகரித்துள்ளனர்.

அத்தோடு பிரதமர் ஹ்ஜ்ஜ் இன்று இரவு 8 மணிக்கு France 2 தொலைக்காட்சியின் செய்திச் செவ்வியில் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்