Paristamil Navigation Paristamil advert login

சிம்புவின் ‘அரசன்’ படத்தில் வில்லனாக களமிறங்கும் கன்னட நடிகர்?

சிம்புவின் ‘அரசன்’ படத்தில் வில்லனாக களமிறங்கும் கன்னட நடிகர்?

8 ஐப்பசி 2025 புதன் 17:36 | பார்வைகள் : 177


நடிகர் சிம்பு கடைசியாக ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது இவர், வெற்றிமாறன் இயக்கத்தில் தனது 49 வது படமான ‘அரசன்’ படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.

அனிருத் இதற்கு இசையமைக்கப் போவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவி, சமந்தா, ஸ்ரீலீலா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இவர்களில் யாரேனும் ஒருவர் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவர் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்தது இந்த படத்தின் முன்னோட்டம் வருகின்ற அக்டோபர் 16 அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் படப்பிடிப்பு தீபாவளிக்கு பின்னர் தான் தொடங்கும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த படத்தின் வில்லன் குறித்த புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது இது தொடர்பாக கன்னட சினிமாவில் முக்கியமான நடிகர்களாக வலம் வரும் கிச்சா சுதீப் மற்றும் உபேந்திரா ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இருவரில் யாரேனும் ஒருவர் இந்த படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாக பல தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி உள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் கிடைக்கும் என  நம்பப்படுகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்