Paristamil Navigation Paristamil advert login

புதிய பிரதமரை நியமிக்கிறார் மக்ரோன்!!

புதிய பிரதமரை நியமிக்கிறார் மக்ரோன்!!

9 ஐப்பசி 2025 வியாழன் 07:00 | பார்வைகள் : 1215


நாளை வெள்ளிக்கிழமை மாலை, நாட்டின் புதிய பிரதமரை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவிப்பார்.

நேற்று புதன்கிழமை மாலையுடன் பிரதமர் Sébastien Lecornu பதவி விலகியிருந்தார். அதை அடுத்து அடுத்த 48 மணிநேரத்துக்குள் புதிய பிரதமரை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நியமிப்பார் என எலிசே மாளிகை தெரிவித்துள்ளது. முன்னதாக பிரான்சுவா பெய்ரூ பிரதமர் பதவியில் இருந்து விலகியிருந்த போதும், அடுத்த 48 மணி நேரத்துக்குள்  Sébastien Lecornu இனை பிரதமராக நியமித்திருந்தார்.

Sébastien Lecornu பிரதமராக ஒருமாத காலம் மட்டுமே பதவியில் நீடித்திருந்தார். ஐந்தாம் குடியரசில் மிக குறுகிய கால பதவி வகித்த பிரதமராக அவர் மாறியுள்ளார்.

இந்நிலையில் புதிய பிரதமராக நியமிக்கப்பட உள்ளவர் யார் என்பது தொடர்பில் விவாதங்கள் எழுந்துள்ளன

வர்த்தக‌ விளம்பரங்கள்