Paristamil Navigation Paristamil advert login

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை பிற்போடப்படுகிறதா - ஓய்வூதிய சீர்திருத்தம்!!

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை பிற்போடப்படுகிறதா - ஓய்வூதிய சீர்திருத்தம்!!

9 ஐப்பசி 2025 வியாழன் 11:17 | பார்வைகள் : 789


ஓய்வூதிய சீர்திருத்தம் மற்றும் வரவுசெலவுத்திட்டங்களை நிறைவேற்றுவதில் மக்ரோனின் அரசாங்கம் பெரும் சவால்களைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை இந்த சீர்திருத்தம் பிற்போடப்படவேண்டும் என முன்னாள் பிரதமரும், தற்போதைய கல்வி அமைச்சருமான Elisabeth Borne தெரிவித்துள்ளார்.

”ஓய்வூதிய சீர்திருத்தம் தற்போதைய நிலையில் மிகவும் கட்டாயமானது இல்லை” என அவர் தெரிவித்தார். எனவே, 205-2026 வரவுசெலவுத்திட்டத்தில் இருந்து ஓய்வூதிய பகுதியை நீக்கிவிட்டு ஏனையவற்றை நிறைவேற்ற முடியும் என அவர் தெரிவித்தார்.

ஓய்வூதிய சீர்திருத்தத்தை 2027 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கொண்டுவரமுடியும் எனவும் தெரிவித்தார்.

அத்தோடு, இடதுசாரிகளுடன் சமரசம் ஒன்றை கட்டாயம் கண்டறியவேண்டும். இல்லை என்றால் இதே நிலமை நீடிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

வர்த்தக‌ விளம்பரங்கள்