Paristamil Navigation Paristamil advert login

ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்த பட ஹீரோ இந்த பிரபலமா?

ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்த பட  ஹீரோ இந்த பிரபலமா?

9 ஐப்பசி 2025 வியாழன் 15:49 | பார்வைகள் : 175


சூர்யா நடிப்பில் உருவாகி வந்த 'கருப்பு' என்ற படத்தின் படப்பிடிப்பை கிட்டத்தட்ட முடித்துவிட்ட இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, தனது அடுத்த படத்தை விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.  

 'கருப்பு' படத்தின் படப்பிடிப்பில் இன்னும் சுமார் பத்து நாட்கள் மீதம் இருக்கும் நிலையில், அதன் பணிகள் தாமதம் ஆகலாம் என்று கூறப்பட்டு வருகிறது. எனவே, ஆர்.ஜே. பாலாஜி அதற்குள்ளாகவே தனது அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கி விட்டதாகவும் தெரிகிறது.   

ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்த படத்தில் 'குட் நைட்' மணிகண்டன் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆர்.ஜே. பாலாஜி கூறிய கதை மணிகண்டனுக்கு பிடித்துவிட்டதாகவும், அவர் இந்தப் படத்தில் நடிக்கச் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.   விரைவில் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்