தீபாவளி முறுக்கு

9 ஐப்பசி 2025 வியாழன் 16:49 | பார்வைகள் : 119
தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசுக்கு அடுத்தபடியாக பலகாரங்கள்தான் முக்கியமாக செய்யப்படும். இதற்காகவே ஒரு வாரத்திற்கு முன்பே குடும்பங்கள் ஒன்று கூடி இந்த பலகாரங்களை செய்வார்கள். ஆனால் அந்த வழக்கம் படிப்படியாக குறைந்து அவரவர் வீடுகளில் செய்வது வழக்கமாகிவிட்டது. அப்படி நீங்களும் வீட்டில் தீபாவளிக்கு பலகாரம் செய்கிறீர்கள் எனில் முக்கிய பலகாரமான முறுக்குதான் முதலில் செய்ய தொடங்குவீர்கள். உங்களுக்கு உதவவே சிறு சிறு குறிப்புகளுடன் இந்த ரெசிபியை பகிர்ந்துள்ளோம். இதோ ரெசிபி..
தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி - 1 கிலோ
பொட்டுக்கடலை - 200 கிராம்
எள் - 2 ஸ்பூன்
உப்பு - தே. அ
வெண்ணெய் - 50 கிராம்
ஓமம் - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - காரத்திற்கு ஏற்ப
எண்ணெய் - வறுக்க தே.அ
செய்முறை :இட்லி அரிசியை 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதிக அளவில் ஊற வைக்கக்கூடாது. இல்லையெனில் மாவு புளிப்பு தன்மை வந்துவிடும்.ஊறிய மாவை கிரைண்டரில் சேர்த்து மைய அரைத்து எடுக்க வேண்டும். மாவு பதம் இட்லி மாவு போல் அல்லாமல் கெட்டியான பதத்தில் ஆட்டி எடுக்க வேண்டும்.மாவு அரைக்கும்போதே உப்பு சேர்ப்பது உப்பை சம அளவில் கலக்க உதவும். மாவு நன்கு மைய அரைபட்டதும் மாவை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.அடுத்ததாக பொட்டுக்கடலையை மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். அரைத்ததும் குருனைகள் இல்லாமல் சலித்துக்கொள்வது அவசியம்.அடுத்ததாக காய்ந்த மிளகாயையும் மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள். மைய அரைத்ததும் அதை சல்லடையில் சேர்த்து வடிகட்ட விதைகள் தனியாக வரும். அதன் சாறை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் முறுக்கு சுட ஆரம்பிக்கலாம்.முறுக்கு சுட அரைத்த அரிசி மாவு எடுத்துக்கொள்ளுங்கள். அதோடு அரைத்த பொட்டுக்கடலை மாவு , மிளகாய் , வெண்ணெய், ஓம, எள், தேவைக்கு ஏற்ப சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளுங்கள். நன்கு பிசைந்து கலப்பது அவசியம்.அடுத்ததாக கடாய் வைத்து அதில் வறுக்க தேவையான எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.காய்ந்ததும் முறுக்கு பிழியும் கருவியில் ஒரு உருண்டை மாவை உருட்டி அதில் சேர்த்து மாவை அழுத்தி வட்டமான செய்ய முறுக்கு வடிவம் வந்துவிடும்.பின் அதை எண்ணெயில் சேர்த்து இரு புறமும் பொன்னிறமானதும் எடுக்கவும். இப்படி ஒவ்வொரு மாவையும் செய்ய முறுக்கு தயார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1