Paristamil Navigation Paristamil advert login

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்க

குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்க

4 ஐப்பசி 2020 ஞாயிறு 08:31 | பார்வைகள் : 8860


 தோப்புகரணம் போடும் போது மூளையில் முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனால் மூளை புத்துணர்ச்சியுடன் செயல்பட ஆரம்பிக்கின்றது. மூளையின் வலது மற்றும் இடது பகுதி சமமான தூண்டுதல் அடைகின்றது மேலும் மூளைக்கு செய்திகளை பரிமாற்றம் செய்யும் காரணிகள் வலுப்பெறுகின்றது. 

 
இந்த எளிய உடற்பயிற்சியின் மூலம் மூளையின் நியூரான் செல்கள் புத்துணர்சி அடைகின்றன. இறுக்கம் சம்மந்த பட்ட நோய்கள் கூட தோப்புகரணம் போடுவதால்  குணமடைவதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இப்பயிற்சியை தினமும் ஐந்து நிமிடம் செய்தால் வியக்கத்தக்க மாற்றங்ளை காணலாம் என்று ஆராய்ச்சியாளர்  கூறுகின்றனர்.
 
மந்தமான மனநிலையுள்ள மாணவர்களின் மூளை செயல்திறன், அவர்கள் காது நுனிகளில் தொடுதல் மூலமான பயிற்சிகளினால், மூளை நினைவு செல்களின்  வளர்ச்சி தூண்டப்பட்டு, நினைவாற்றல் சக்தி, ஞாபக சக்தி, அதிகரிப்பது மட்டுமல்லாது அறிவு கூர்மையையும் வெளிபடுத்துகிறது.
 
இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் இரத்த ஓட்டம் சீராக  செல்வதால் மூலை பலம் அடைகிறது.
 
நினைவாற்றலை பெருக்கும்:
 
தொடர்ச்சியாக செய்யச்செய்ய, மூளை, சுறுசுறுப்படைகிறது, விழிப்படைந்த நினைவு செல்களின் ஆற்றலால், மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கிறது. மனிதனின் மந்தநிலையை நீக்கி, அவனுக்கு ஊக்கமும் உற்சாகமும் தரும். மாணவ, மாணவிகள் கட்டாயம் தோப்புக்கரணம் போட்டால் அவர்களது மூளை  சுறுசுறுப்பாகி படிப்பது மனதில் நன்கு பதியும். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்