Paristamil Navigation Paristamil advert login

வெள்ளை சர்க்கரையை அதிகம் எடுத்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும் ஏன் தெரியுமா...?

வெள்ளை சர்க்கரையை அதிகம் எடுத்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும் ஏன் தெரியுமா...?

16 புரட்டாசி 2020 புதன் 13:47 | பார்வைகள் : 9432


 தேனீர், காஃபி, இனிப்பு வகைகள் போன்றவற்றின் மூலம் அதிகளவில் வெள்ளைச் சர்க்கரையை எடுத்துக்கொள்வதுடன், போதிய உடற்பயிற்சியைச் செய்யாமல்  இருந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, நீரழிவு நோய் ஏற்படுகிறது. 

 
நாம் உண்ணும் உணவில் வெள்ளைச் சர்க்கரையை படிப்படியாகத் தவிர்க்க வேண்டும். வெல்லம், வெள்ளைச் சர்க்கரை இவை இரண்டுமே கரும்பில் இருந்துதான் தயாரிக்கப்படுகின்றன.
 
இதில், வெல்லத்தை நாம் எவ்வளவு எடுத்துக்கொண்டாலும், நம் உடலுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காது. அதேநேரத்தில், வெள்ளையாக வர வேண்டும் என்பதற்காக அதிகளவில் ரசாயனம் சேர்த்துத் தயாரிக்கப்படும் வெள்ளை சர்க்கரை, உடலுக்குப் பலவிதத்தில் தீங்கை  விளைவிக்கிறது.
 
ஆபத்தான வெள்ளை சர்க்கரையை தவிற்பது மிகவும் அவசியமாகிறது. ஆனால் இதனை உடனே நிறுத்தினால் தலைவலி, எரிச்சல், மூச்சுத்திணறல், அஜீரணம் தொடர்பான கோளாறுகள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 
நெய் மற்றும் இனிப்பு வகைகளை உட்கொண்டாலும், இந்த உடற்பயிற்சி உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
 
சத்துக்கள் நிறைந்த பழங்கள், பாதாம், முந்திரி போன்ற பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றை உங்கள் உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 
காஃபி, தேனீருக்கு பதிலாக க்ரீன் டீயைப் பயன்படுத்தலாம். காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு சேர்த்துப் பருகலாம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்