புளி இலை தானேனு லேசுல கணக்கு போடாதீங்க...
17 ஆவணி 2020 திங்கள் 08:30 | பார்வைகள் : 9555
புளி சுவைக்காக மட்டுமல்ல சத்துக்களும், மருத்துவ பயன்களும் அதிகம் கொண்டுள்ளது. இதன் மருத்துவ குணங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்...
புளி இலைகளை கொதிக்க வைத்த நீர், ஜுரம் உள்ளவர்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்கள் களைப்பு நீங்க குடிக்க பயன்படுகிறது.
புளி இலைகளை தண்ணீரில் விட்டு அதன் ஆவி பிடித்தால் முடக்கு வாதத்திற்கு நல்ல ஒரு தீர்வாக அமைகிறது.
புளி இலைகளை நறுக்கி நீரில் கொதிக்க வைத்து அதை பருகினால், காய்ச்சல் மற்றும் சூடாக சிறுநீர் கழிவது குறையும்.
புளி இலைகளை கசக்கி சாறு எடுத்து குடித்தல் சீத கழிச்சலுக்கு நல்ல தீர்வு.
புளி இலைகளை கஷாயம் இட்டு பருகினால் மஞ்சள் காமாலை, குழந்தைகளுக்கு வயிற்று புழுக்கள், பூச்சிகள் நீங்கும்.
புளி இலை சர்க்கரை நோய், பிறப்புறுப்புகளில் தொற்று, மாதவிடாய் காலங்களில் வரும் வயிற்று வலிக்கு நல்ல மருந்தாகும்.