ஐநா சபையில் சீர்திருத்தம்: பிரிக்ஸ் கூட்டத்தில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

27 புரட்டாசி 2025 சனி 14:44 | பார்வைகள் : 129
ஐநா சபையில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம் என்று நியூயார்க்கில் நடந்த பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா பொதுச்சபை கூட்டத் தொடர் நடந்து வருகிறது. பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தி வருகின்றனர்.
இதில் கலந்துகொள்ள சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தை நடத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது: உலகத்தில் பல்வேறு மோதல் நிலவி வரும் நிலையில் அமைதியை உருவாக்க பிரிக்ஸ் அமைப்பு முக்கியமான ஒன்றாக மாற வேண்டும்.
ஐநா. பாதுகாப்பு கவுன்சிலில் விரிவான சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும். அதிக வரி விதிப்பு உட்பட வர்த்த மோதல் நிலவி வரும் நிலையில், வர்த்தக அமைப்பைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இதே போல, பிரிக்ஸ் அமைப்பில் இடம் பெற்றுள்ள இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தையும் ஜெய்சங்கர் தனியாக நடத்தினார். பிரிக்ஸ் கூட்டமைப்பு மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் வெறுப்பை கொட்டி வரும் நிலையில் அமெரிக்காவிலேயே இத்தகைய கூட்டத்தை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1