கின்னஸ் உலக சாதனை படைத்த கனடிய காளை
27 புரட்டாசி 2025 சனி 11:59 | பார்வைகள் : 1243
கனடாவின் ஆல்பெர்டா மாகாணத்தில் உலகின் உயரமான காளை குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிட்டுள்ளது.
வல்கன் பகுதியில் வளர்க்கப்படும் ஹோல்ஸ்டீன் இன காளையான ‘பீஃப்’ (Beef) என்ற காளை தற்போது கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் உலகின் உயரமான காளையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக இறைச்சிக்காக வளர்க்கப்படும் காளைகளில் ஒன்றான ‘பீஃப்’, அதற்கு மாறாக தனது உரிமையாளரான ஜாஸ்மின் என்ட்ஸ் அவர்களால் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்டு வருகிறது.
கின்னஸ் பதிவின்படி, ‘பீஃப்’ இப்போது 1.95 மீட்டர் (6 அடி 5 அங்குலம்) உயரம், 1,090 கிலோ எடை, மேலும் மாதந்தோறும் 1,130 கிலோ அல்ஃபால்ஃபா பச்சிலை (ஒரு மினிவேனின் அளவுக்கு சமமான பசுமை தீனி) உண்ணுகிறது.
தனது புகைப்படம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுகிறது என்பதே ஒரு கனவு நனவாகியது போன்ற உணர்ச்சி,” என ஜாஸ்மின் தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டில் பிறந்தபோது சாதாரண அளவிலிருந்த ‘பீஃப்’, வயதுக்குச் செல்லச் செல்ல அளவுக்கு மீறி வளர்ந்து, இன்று எட்டு ஆண்டுகளில் உலக சாதனையாளனாக மாறியுள்ளது என தெரிவித்துள்ளார்.
தற்போது உலகிலேயே உயிருடன் உள்ள காளைகளில் உயரமான காளையாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதோடு, இத்தாலியில் 6 அடி 8 அங்குலம் உயரம் கொண்ட காளையின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பும் அதனிடம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan